முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரை..!

மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ:

எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி...!

இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது காரணம் ...

எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம்...

இனி, இளைப்பாற விரும்புகிறோம்...

அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம்...

ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்...

நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள்
அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்...

அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன்...

இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்"

அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன்...

ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே...

இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்...

ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது...

கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்...

என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது...

எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன்...

அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும்...

எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன்...

அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள்...

எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது...

இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்...

அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்

ஆம்...

அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்...

எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள்...

ஆனால் அதே வேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறை வைக்காதீர்கள்...

அவள் மிகவும் நளினமானவள்...

அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள்...

உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும்,

ஆறுதல் தர...
அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள்...

அதுவே அவளுக்கு அருமருந்து...

அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள்...

அவளைப் புரிந்து கொள்ளுங்கள்...

தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்...

என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம்...

எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்...

அன்பிற்குரிய மருமகனே…

இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம்...

ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும் போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும்...

அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும்...

எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்...

இந்த உரையை

மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன்...🌷
❤️❤️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...