முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிதம்பரம் நடராஜர்

**

இந்த உலகத்தின் ஒட்டு மொத்த மையப்புள்ளி அமைத்திருக்கும் இடமாக, தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்டு, இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளது.

சிதம்பரம் நடராஜர்கோவில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற் கூறுடன் பொருத்துவதும் அதிசயமே, ஆகவே தான் நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்தசக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர் இக்கோவிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சர்யங்களும் ஏராளம் இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோவிலின் அமைப்பில் புதைந்துபோய் உள்ளன.

*சிதம்பரம் நடராஜர் தெரிந்ததும் தெரியாததும்*

   சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து,தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால்பெருவிரலில்தான், மொத்தபூமியின் காந்தமையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. 

இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து, இக்கோவிலை, நம் முன்னோர் கட்டினர் அவர்கள், ஆன்மிகத்தின் உள் அறிவியலை நவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த நவின கருவிகள் ஏதும் இல்லாத அந்தகாலத்தில், இதை முன்னோர் கண்டறிந்துள்ளனர் என்பது, நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச்செல்கிறது. 

அணுத்துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, அதைபூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனை தான்.

   இதை 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்த திருமூலரின் சிந்தனை ஆற்றலும், சக்தியும் மகத்தானது, திருமூலரின் திருமந்திரம், உலகிற்கேவழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர, இன்றைய அறிவியல்.

மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம் ‘சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம் என்றுபலரும், பலதகவல்களை கூறிவரும் வேளையில், கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாவை முன்னோர் செய்த அனைத்தும் செயல்களும், ஒருதெளிவான சிந்தனையை நோக்கியேபயணித்துள்ளது. 

மன்னர்கள்களுக்கு, பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதைக்கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.

 மனிதஉடலை அடிப்படையாகவைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோவிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை, 21,600 தங்கத்தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது.

இது, ஒருமனிதன், தினமும் சராசரியாக, 21,600 முறைசுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது. இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் மொத்த நாடிகளையும் குறிக்கின்றன, இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும். 

திருமூலர், திருமந்திரத்தில், ‘மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே” என்று கூறுகிறார். அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்” என்ற பொருளைக் பொன்னம்பலம், சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது.

இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும், இற்த இடத்தை அடைய, ஜந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகள், பஞ்சாட்சர படிகள் என அழைக்கப்படுகின்றன.

அதாவது, *சி, வா, ய, ந, ம* என்ற ஐந்து எழுத்தே அது கனகசபை, பிறகோவில்களில் இருப்பதைபோன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது. 

இந்த கனகசபை தாங்க, நான்கு தூண்கள் உள்ளன. இது நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. பொன்னம்பலத்தில், 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும், 28 வழிகளையும் குறிக்கின்றன. 

இந்த 28 தூண்களும், 64+64 மேற்பலகைகளை பீம் கொண்டன இது, 64 கலைகளை குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பலவகைகள், மனித உடலில் ஓடும்பல ரத்த நாளங்களை குறிக்கின்றன.

பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும், அர்தத மண்டபம் அருகில் இருக்கும் மண்டபத்தில் உள்ள, 18 தூண்களும், 18 புராணங்களையும் குறிக்கின்றன.

சிதம்பரம் நடராஜரின், ஆனந்ததாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக்டான்ஸ், என்று பலவெளிநாட்டு அறிஞரிகளால் அழைக்கப்படுகிறது. இந்துமதசாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை அவை, மனிதனைமேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை.

*சிதம்பரகசியம்: சித் + அம்பரம் ஸ்ரீ சிதம்பரம்*

    சித் அறிவு, அம்பரம் வெட்டவெளி, மனிதா உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலதுபக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். 

இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வதளமாலை ஒன்று சுவரில் தொங்கிவிடப்பட்டுக்காட்சி அளிக்கும். 

மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உண்ர்த்துவதே அகண்டபெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. 

இது தான், சிதம்பரர் சிவனின் ரூபங்களில் ஒன்றான நடராஜர் எனப்படும் நடன அவதாரக்கோலம் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர்கோயில். 

அந்த அளவுக்கு இந்த திருத்தலம் அகிலமெங்கும் பிரசித்தம். அந்த அகிலப் பிரசித்திக்கு எல்லா வகையிலும் தகுதிவாய்ந்த ஒருபிரமாண்டகோயில் வளாகம்தான் இந்த நடராஜர் கோயில்.

*அமைவிடம்* சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்து சிதம்பரம் செல்ல பஸ் வசதிஉள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...