முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோரணமலை முருகன்..!

🙏
      இன்று
  கிருத்திகை    தோரணமலை
     முருகன்..!
      🦚🙏🦚
 ****************
கோடி மலைகள்
இருப்பினும்
இம்மலைபோல்
ஆகுமா..?
முருக பக்தர்
மனமெலாம்
வணங்காமல்
போகுமா..?
              🦚
"தோரணமலை"
உச்சியில்
கோயில்கொண்டு
வாழ்கிறான்.!
முருகா முருகா
என்போர்தம்மின்
மனதில் வந்து
ஆழ்கிறான்!
               🦚
விண்ணைமுட்டும்
மேகங்கள்
இங்கு வந்து
பணியிது.!
பக்த ரோட
ஆசைகள்
இங்குவந்தால்
தணியுது..!
            🦚
தாரணியில்
ஈதுமே
தனித்துவம்
மிக்கக்
கோயிலு.!
உலக மக்கள்
போற்றிடும்
ஆன்ம நேய
வாயிலு..!
             🦚
சித்தர்கள்வாழும்
செம்மலை..!
வாங்கபோலாம்
இம்மலை..!
குறுமுனியாம்
அகத்தியர்
தேரையரும்
வாழ் மலை...!
            🦚
காவடி ஆடிப்
பாடியே..!
நாடும் பக்தர்
ஆழ் மலை.!
ஆன்ற புகழ்
அகத்தியர்
தேரையரும்
சேர்ந்துமே...!
          🦚
சித்த
மருத்துவம்
பற்றியே
ஆய்ந்தறிந்த 
மாமலை..!
இயற்கைஅன்னை
கொலுவிருக்கும்
எழில்கொஞ்சும்
பூமலை!
           🦚
தோரண
மலையைச்
சுற்றியே
இரண்டுநதிகள்
ஓடுது..!
இராம நதியும்
ஜம்பு நதியும்
முருகனை
வணங்கிப்
பாடுது..!
             🦚
கால ஓட்டக்
கதியினால்
சுனைக்குள்
முருகன்
போயினன்.!
பல்லாண்டுகள்
ஆகியும்
வெளி வராத
தாயினன்..!
             🦚 
"முத்து மாலை
புரம் " எனும்
ஊர்வாழும்
சீர்மிகு
பெருமாள்எனும்
ஐயாவின்.!
கனவில் சென்று
முருகனும்
சுனைக்குள்
நானும்
கிடக்கிறேன்..!
            🦚
எனை எடுத்து
வழிபட
ஆவன செய்க
என்றனன்..!
உடனெடுத்து
மலையினில்
உச்சிக்குகைக்
கோயிலில்...!
            🦚
வைத்துஎல்லாரும்
வணங்கினர்..!    
சுற்றி உள்ள
ஊர் மக்கள்
ஒத்துழைக்க
இணங்கினர். !
             🦚
பெருமாள் ஐயா
பேரன்.திரு
ஆதி
நாராயணன்
அவர்களின்..!
வம்சாவளி
தொடர்ந்துமே
வாழையடி
வாழையாய்.!
           🦚
கோயில் பணி
செய்கிறார்..!
முருகனருள்
பெற்றுமே...!
வளமுடனே        
உய்கிறார்..!
இங்கிருந்தே
அகத்தியர்
பொதிகைமலை
சென்றனர்..!
         🦚
தேரையர்ஆனச்
சித்தரும்
இங்கிருந்தே
வென்றனர்..!
தேரையர் ஜீவ
சமாதி
இம்மலையில்
இருக்குது..!
வந்து தொழும்
பக்தர்கட்கு.!
           🦚
ஐஸ்வர்யம்
கொடுக்குது..!
தோரணமலை
ஏறும் போதே
உடம்பு எல்லாம்
சிலிர்க்கிது..!
மனதில்எண்ணும்
எல்லாமும்
உடனடியாய்ப்
பலிக்கிது..!
           🦚
நமக்கு நல்ல
நிம்மதி
இம்மலையில்
கிடைக்கிது...!
திருமணம் கை
கூடுது..!
மக்கட் பேறும்
நாடுது..!
வறுமை எலாம்
ஓடுது..!
             🦚
மனம்மகிழ்ந்து
ஆடுது..! 
தோரணமலை
மால் மருகா..!
வருக ! வருக !
வருகவே..!
வெற்றி நல்கும்
வேல் முருகா..!
வினைகள்தீர்த்து
அருள்கவே..!
         💐🙏💐
        அடியேன்
    "முருகனடிமை"
விசூர்மாணிக்கம்
     05.06.2024.
தினம்ஒருகவிதை
     எண்.2090.
 முருகா முருகா 
       🦚🙏🦚

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...