ஒரு சமயம் ஒரு வியாபாரி, ஒரு துறவியைத் தன் வீட்டிற்கு மதிய நேர உணவிற்காக அழைத்தார். ஆனால் அன்று, அந்த துறவி ஏகாதசி விரதம் மேற்கொண்டு இருந்தார். அவரால் அங்கே போக முடியாமல் போனது. எனவே, அவர் தனது சீடர்கள் இருவரை, வியாபாரியின் வீட்டிற்கு சாப்பிட அனுப்பி வைத்தார் … ஆனால், அந்த இரண்டு சீடர்களும் திரும்பிய நிலையில், ஒருவர் வருத்தமாக இருந்தார்; இன்னொருவர் மகிழ்ச்சியாக இருந்தார்!
அந்த துறவிக்கு இதைப் பார்த்ததும், ஒரே வியப்பு; அவர் கேட்டார்,”மகனே, நீ ஏன் வருத்தமாக இருக்கின்றாய்? அந்த வியாபாரி, அவருடைய விருந்தோம்பலின் போது, ஏதேனும், வேறுபாட்டை, உங்களிடையே, காட்டினாரா?“
“இல்லை மாஸ்டர்.”
“நீங்கள் அமரவைக்கப்படுவதில், ஏதேனும் வேறுபடுத்திக் காட்டினாரா?”
“இல்லை, மாஸ்டர்.”
“ அந்த வியாபாரி தட்சிணை கொடுப்பதில் ஏதேனும், வேறுபாடு செய்தாரா?”
“இல்லை குருஜி. அவர் எங்கள் இருவருக்குமே, சமமாகவே, தொகையைக் கொடுத்தார். எங்கள் ஒவ்வொருவருக்கும் சமமாக 2 ரூபாய் கொடுத்தார்.”
இப்போது, குருஜி, இன்னும் அதிக அளவு வியப்பு அடைந்து கேட்கலானார். “பிறகு நீ வருத்தம் கொண்டு இருப்பதற்கான காரணம்தான் என்ன? மேலும், இந்த சீடர் பார்ப்பதற்கு அதிகமான அளவுக்கு, மகிழ்ச்சியாக இருக்கின்றாரே.”
அந்த வருத்தமான சீடர் கூறினார்,“ குருஜி, நான் வழக்கமாக நினைப்பது உண்டு; அதாவது அந்த வியாபாரி மிகவும் பணக்கார மனிதர். எனவே, அவர் எங்களுக்கு குறைந்த பட்சம், ரூபாய் 10 தட்சணையாகக் கொடுத்திடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ, வெறும் 2 ரூபாய் மட்டுமே கொடுத்தார். அதனால்தான், நான் வருத்தமாக இருக்கிறேன்!!”
அப்போது, அந்த துறவி, அடுத்த சீடரிடம் கேட்டார். “நீ ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறாய்?”. அந்த சீடர் கூறினார், “குருஜி, அந்த வியாபாரி மிகப் பெரிய கஞ்சன் என்று நன்றாகவே தெரியும். எட்டணாவுக்கு மேலே, அவர் தட்சணை தர மாட்டார் என்று நான் கருதினேன். ஆனால், அவரோ 2 ரூபாய் கொடுத்து விட்டார். ஆகவே, நான் மகிழ்ச்சியாக ஆகி விட்டேன். …!”
“நண்பர்களே, இவ்வாறுதான், நமது மனநிலை இருக்கிறது. உலகில் உள்ள அனைவருக்குமே, நடக்கின்ற சம்பவங்கள் எல்லாமே, ஒரே மாதிரியாக சமமாகவே நடக்கிறது. ஆனால், சில பேர், அந்த நிகழ்வுகளில் இருந்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இன்னும் சில பேர் வருத்தம் அடைகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், வருத்தம் என்பதும் இல்லை அல்லது மகிழ்ச்சி என்பதும் இல்லை. அவை எதுவென்றாலும், நம்முடைய மனநிலையைப் பொறுத்தே அவை அமைகின்றன! மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறா விட்டால், பிறகு அங்கே வருத்தம் ஆகிறது; அதே வேளையில், ஆசைகள் நிறைவேறி விட்டால், பிறகு அங்கே மகிழ்ச்சி இருக்கும். ஆனால், அங்கே ஆசையே இல்லை என்று ஆகி விட்டால், அதன் பிறகு அங்கே இருப்பது பேரானந்தமே தான்.!
கருத்துகள்
கருத்துரையிடுக