முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணக்கெடுப்பின் முடிவு

ஒரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அவருடைய மாணவர்களுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தார். மும்பையில் இருக்கும் தாராவி என்ற இடத்தில் இருக்கும், ஒரு சேரியில் இது நடக்கிறது. 10 முதல் 13 வயது வரையுள்ள பையன்களிடம் தொடர்பு கொண்டு, அவர்தம் வருங்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறார்கள் என்பதையும், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் சமூக சூழ்நிலைகளையும் அவர்கள், மதிப்பாய்வு செய்திட வேண்டும்.

  அந்த கல்லூரி மாணவர்கள் வேலை செய்யத் தொடங்கினார்கள். அந்த சேரியில் உள்ள 200 குழந்தைகளின் வீடுகளின் சூழல், அவர்களுடைய பெற்றோர்களின் சூழல், வாழ்க்கை முறை மற்றும் அங்குள்ள மக்களின் கல்வித்தரம், மது, போதை வஸ்து இவற்றின் நுகர்வு இது போன்ற பல்வேறு காரணிகளை கருத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதற்குப் பிறகு அங்கே இருக்கும் பையன்களை சேர்த்து, பேட்டி எடுத்தனர். அவர்களுடைய கருத்துக்கள் தீவிரமாக கேட்கப்பட்டு, குறிப்புக்கள் கருத்தில் கொள்ளப் பட்டன. 

 இந்த அசைன்மெண்ட் முடிவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது. இதன் முடிவின் படி, அந்தப் பையன்களில் 95% குழந்தைகள் கிரிமினல் வழிகளில் போகின்றனர்; மேலும் வளர்ந்த பிறகு, அந்தக் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக, சிறைக்கு செல்கிறார்கள். வெறுமனே, ஒரு 5% குழந்தைகள் மட்டுமே, ஒரு நல்ல வாழ்க்கையை நடத்திச் செல்ல முடிகிறது.

 அதாவது இந்த அசைன்மெண்ட் முடிவுற்ற போது, தொடர்ந்து, இது மறக்கப்பட்டது. 25 வருடங்களுக்குப் பிறகு, மற்றொரு பேராசிரியர் பார்வையில் இது பட்டது. அவர் 5 குழுக்களை தயார் செய்தார். ஒவ்வொரு குழுவிலும் 3 மாணவர்கள் இருந்தார்கள். அவர்களை தாராவிக்கு அனுப்பினார்; கணிப்புக்கள் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கிறது என்று காண வேண்டும் என்று கருதப்பட்டது. அந்த 200 பேர்களில், கொஞ்சம் பேர் இறந்து போய் விட்டனர்; மேலும் கொஞ்சம் பேர் அடுத்த இடத்திற்கு சென்று விட்டார்கள். இருந்தாலும், 180 பேரை, அவர்களால் சந்திக்க முடிந்தது. இப்போது, அந்த கல்லூரி மாணவர்கள் இந்த செயலை எடுத்துச் செய்யும் போது, அவர்களுக்கு ஆச்சரியம். அந்த முடிவுகள் முந்தைய கணிப்பை விடவும் மாறுபட்டு காணப்பட்டது.

 அவர்களில் 4 அல்லது 5 பேர் மட்டுமே, சாதாரணமான சண்டைகளுக்காக, குறுகிய காலத்திற்கு ஜெயிலில் இருந்தார்கள்! மேலும், எல்லோருமே, சாதாரணமாகவே, கண்ணியத்தோடு வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்தார்கள். இன்னும், சிலர் பொருளாதார ரீதியிலும் மிக நன்றாக வாழ்க்கையைக் கொண்டு சென்றார்கள்.

 அந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பேராசிரியரும் கூட, இதைப் பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள். ஒரு சூழல், அதாவது அது மக்களை இலகுவாக கவர்ந்து இழுத்து இருக்கிறது; குற்றங்கள் செய்வதில் இருந்து விடுவிக்க, அங்குள்ள மக்கள் கடினமாக உழைத்து நேர்மையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், ….. இது சாத்தியம் ஆனது எவ்வாறு?

 கணக்கெடுப்பின் முடிவுகளை வைத்து ஆலோசித்த பிறகு, அந்த மாணவர்கள் திரும்பவும் அந்த 180 பேரை சந்தித்தார்கள். அவர்களிடம் இருந்து இது எவ்வாறு நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தார்கள். அந்த மக்கள் ஒவ்வொருவருமே கூறினார்கள்,
“நாங்களும் கூட தவறான வழியில்தான் போய்க் கொண்டு இருந்திருப்போம்; ஆனால், எங்களுடைய ஆசிரியை ஒருவரால், நாங்கள் சரியான வழியில் வாழத் தொடங்கினோம். குழந்தைப் பருவத்தில் அவர்கள் எது சரி மற்றும் எது தவறு என்னும் அறிவை எங்களுக்குத் தராமல் இருந்திருந்தால், இன்று நாங்களும் கூட குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும்.. !”

 அந்தக் கல்லூரி மாணவர்கள், அந்த ஆசிரியை சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அவர்கள் அந்தப் பள்ளிக்குச் சென்ற போது அந்த ஆசிரியை ஏற்கனவே, பணி ஓய்வு பெற்றதை அறிந்தார்கள். எனவே அவர்கள் தேடிப் பிடித்து அவர் வசிக்கும் வீட்டைச் சென்று அடைந்தார்கள். அவர்கள் எல்லாவற்றையும் கூறிவிட்டு பிறகு கேட்டார்கள்,“ அந்தப் பையன்கள் மீது நீங்கள் என்ன மந்திரம் செய்தீர்கள்; அவர்கள் வாழ்க்கையில் இந்த மாதிரியான, ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி அவர்களை நேர்மையான குடிமக்களாக மாறச் செய்தீர்கள்?“

 அந்த ஆசிரியை சாதாரணமாக பதிலளித்தார், இயல்பான எளிமையோடு: “மேஜிக் இல்லவே இல்லை அன்பானவர்களே; எனக்கு எந்த மேஜிக்கும் தெரியாது.” மேலும் ஒரு பதட்டமான சிரிப்பை உதிர்த்தார். “நான் என்னுடைய மாணவர்களை, எனது சொந்தக் குழந்தைகளைப் போல நேசித்தேன்!” நான் செய்தது என்றால், அது ஒன்றே ஒன்றுதான்.” அன்பான புன்னகை அவரிடம்; பெருமிதமான பிரகாசம் அவரது கண்களில் தெரிந்தது.

 நமக்கு ஒரு போதும் தெரியாது; எவ்வாறு மற்றவர்களுடைய வாழ்க்கையை நம்முடைய இரக்க உணர்வினால், தொட இயலும் என்பது. நம்மிடம் இருக்கும், சிறிய சைகை கூட, ஒரு மந்திரம் போன்ற தொடுதலாகி, யாரோ ஒருவரது வாழ்க்கையைத் தன்மை மாற்றம் அடையச் செய்கிறது. மேலும், நமது ஆசிரியர்களின் கைகளில் இருக்கின்ற, மாபெரும் ஆற்றலாக அது இருக்கிறது!

 இந்த இதய நிறைவுக் கதைக் குழு, உலகம் முழுவதும் இருக்கின்ற எல்லா ஆசிரியர்களையும், அவர் தம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக போற்றி,
வணங்கி நிற்கிறது.

 ஒரு நல்ல ஆசிரியர் அல்லது வழிகாட்டி கிடைப்பது என்றால், அது ஒரு வரப்பிரசாதம். ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு பாடத்தில் நிபுணத்துவம் அடைய வேண்டும் என்பதற்காக, அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...