முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவியரின் ஞானம்

முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு கண்ணும், ஒரு காலும்தான் இருந்தன.

 இந்தக் குறைபாடுகள் இருந்தும், அவர் ஒரு திறமையான; இரக்கமான; புத்திசாலித்தனமான அரசராக ஆட்சி புரிந்தார். அந்த அரசரது ஆட்சியின் கீழ் அவரது மக்கள் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
    
ஒரு நாள் அரசர் தன் அரண்மனை நடை கூடத்தின் வழியாக நடந்து கொண்டு இருந்தார். திடீரென்று, சுவரில் மாட்டி இருந்த படங்களின் மீது அவரது பார்வை விழுந்தது. அவை அவரது முன்னோர்களின் படங்கள் ஆகும். தன்னைப் போல, தனக்குப் பின் வருகின்ற சந்ததியினர்களும் இதே போல் நடக்கும் போது, தம் முன்னோர்களின் படங்களைப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். இந்த அரசரது படம் இதுவரை அங்கு போடப் படவில்லை.

 அவரது குறைபாடுகளால், அதாவது ஒரு கண், ஒரு கால் இல்லாத குறைபாடுள்ள அவரது உருவத்தை போடுவது பற்றி அரசர் தயக்கத்தோடு இருந்தார். ஆனால் அன்று தன்னுடைய படத்தையும் போட வேண்டும் என்று, ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தார்.     
அடுத்த நாள் அந்த நாட்டில் உள்ள சிறந்த ஓவியர்கள் அனைவரையும் தன் அவைக்கு வரவழைத்தார். அரண்மனை சுவரில் என்னுடைய அழகான படத்தை போட வேண்டும். அதை நீங்கள் யாராவது வரைந்து தர வேண்டும் என்று அறிவித்தார். உங்களில் யாரால் வரைய முடியுமோ அவர்கள் முன்னால் வாருங்கள் என்றார். நன்றாக வரைபவருக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படும்.
அங்கு வந்திருந்த அனைவருமே திறமையான ஓவியர்கள்தான். ஒரு கண், ஒரு கால் இல்லாத அரசரை எப்படி அழகாக வரைய முடியும்? அந்தப் படம், எப்படி அழகாக இருக்க முடியும்?. நாம் நன்றாக வரையா விட்டால், அரசரின் தண்டனைக்கு ஆழாவோம் என்று பயந்தார்கள்.

 இந்த எண்ணம் அனைவருக்கும் இருந்ததால் யாருமே முன்னால் வரவில்லை. யாருக்குமே தைரியம் இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைக் கூறி, அமைதியாக மன்னிப்புக் கேட்டு, அறையை விட்டு வெளியேறினார்கள்.

ஒரே ஒரு இளம் வயது ஓவியன் போகாமல் நின்றான். அரசர் அவனிடம்,“நீ என்னுடைய படத்தை வரைய தயாராக இருக்கிறாயா?” என்று கேட்டார். அந்த இளம் ஓவியர் அதற்கு சம்மதித்தார். அடுத்த நாளே அவர் அரசரின் படத்தை வரைய ஆரம்பித்தார். சில நாட்களுக்குப் பிறகு அரசரது படம் தயாராகி விட்டது. அரசரின் படத்தை திறந்து வைப்பதற்கான நாள் வந்தது. அனைவரையும் அரசர் அவைக்கு வரவழைத்தார். படத்தை வரைய மறுத்த அனைத்து ஓவியர்களும் அங்கு இருந்தார்கள். அனைவரும் அரசரின் படத்தைக் காண்பதற்கு, ஆவலாக இருந்தனர்.
அரசரது படம் திறக்கப் பட்ட போது, அரசர் உட்பட அனைவரது கண்களும் ஆச்சரியத்தால் விரிவடைந்தன. அந்த ஓவியம் மிகவும் அழகாக இருந்தது. அந்தப் படத்தில் மன்னர் ஒரு குதிரையின் மேல் தன் கால்களை இரு பக்கத்திலும் போட்டபடி அமர்ந்து இருந்தார். படத்தில் அரசரது ஒரு கால் மட்டுமே ஒரு பக்கத்தில் இருப்பது போல வரையப்பட்டு இருந்தது. அவரது குதிரையின் மீது இருந்து கொண்டு, அம்பை குறிபார்த்து எய்துவதற்கு முயற்சி செய்வது போல் படம் வரையப் பட்டு இருந்தது.

 அம்பைக் குறிபார்க்கும் போது, ஒரு கண் மூடிய படியே இருக்க வேண்டும். கண் குறைபாடும், கால் குறைபாடும் மிக புத்தி சாலித்தனமாக மறைக்கப்பட்டு, ஓவியர் படத்தை மிக அழகாக வரைந்து இருந்தார்.
அரசர் படத்தைப் பார்த்து மிகவும் திருப்தி அடைந்தார். தனது குறைபாடுகளை மறைத்து விவேகத்தோடு ஓவியர் அழகாக வரைந்ததைப் பார்த்து மகிழ்ந்தார். ஓவியருக்கு வெகுமதிகள் வழங்கி, தன் அவையில் தலைமை ஓவியராக பதவி வகிக்கும்படி செய்தார்.

ஒவ்வொரு மனித ஜீவனிடமும் கணக்கில் அடங்காத திறமைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மனித ஜீவனிடமும் கணக்கில் அடங்கா திறமைகள் இருக்கின்றன. அந்த திறமைகளை, வெளிப்படுத்துவதற்கு நேர்மறையான மனோபாவமும், அன்பான நோக்கமும் தேவைப் படுகின்றன.

 நேர்மறையான அணுகுமுறை இருக்கும் போது, எல்லாவிதமான கடினமான சூழ்நிலைகளையும் இலகுவாகத் தீர்த்து விடலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...