வால்மீகி அவருடைய இராமாயணத்தை நிறைவு செய்த போது, நாரதருக்கு அது ஈர்ப்பாக இருக்கவில்லை. “இது நன்றாக இருக்கிறது; ஆனால், ஹனுமான் எழுதி இருப்பது, இன்னும் மேலாக இருக்கிறது.” என்றார் நாரதர்.
“ஹனுமான் ராமாயணம் கூட எழுதி இருக்கிறாரா? வால்மீகிக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. யாருடைய இராமாயணம் மிகவும் நன்றாக இருக்கிறது, என்பது பற்றி மேலும் ஆச்சரியம் அடைந்தார். ஆகவே, ஹனுமானைத் தேடிக் காண, கிளம்பி விட்டார்.
கதலி வனத்தில் வாழைத் தோப்பு; அவர் ஏழு அகலமான வாழை இலைகளில், இராமாயணம் பொறிக்கப்பட்டு இருப்பதை, பார்த்தார்.
அவர் அதை வாசித்தார்; அது நேர்த்தியாக இருந்தது. மிகவும் துல்லியமான இலக்கணத் தெரிவு, அத்துடன் சேர்த்து சொல்வளம், துல்லியமான மற்றும், காதுக்கினிய கருத்துக்கள் என்று காணப்பட்டது. அவரால், அவருக்கே கூட உதவிட முடிய வில்லை; அழுவதற்கு ஆரம்பித்தார்.
“ இது என்ன அவ்வளவு தூரம் மோசமாகவா இருக்கிறது” என்று கேட்டார் ஹனுமான்.
“இல்லை; இது மிகவும் நன்றாக இருக்கிறது.” என்றார் வால்மீகி.
“பிறகு நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? “இது ஹனுமான் கேள்வி.
“ஏனென்றால், உனது இராமாயணத்தைப் படித்த பிறகு, என்னுடையதை, யார் ஒருவருமே படிக்க மாட்டார்களே,” என்று பதில் சொன்னார் வால்மீகி.
இதைக் கேட்டுக் கொண்டு இருந்த ஹனுமான், அப்படியே சாதாரணமாக, அந்த ஏழு வாழை இலைகளையும், அப்படியே கிழித்து எறிந்து விட்டார்.“ இப்பொழுது யார் ஒருவரும், ஒரு போதும், ஹனுமான் இராமயணத்தைப் படிக்க மாட்டார்கள்” என்றார்.
ஹனுமான் மேலும் கூறினார், “எனக்கு என்னுடைய இராமாயணம் தேவைப்படுவதை விடவும், மிக அதிகமாக, உங்களுக்கு, உங்கள் இராமயணம் தேவைப் படுகிறது.” நீங்கள் உங்களைப் பற்றி எழுதினீர்கள். ஆகவே இந்த உலகம், வால்மீகியை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருக்கும். நான் என்னுடைய இராமாயணத்தை எழுதினேன்; ஆகவே நான் ராமரை நினைவில் கொள்கிறேன்.
அந்தக் கணத்தில் வால்மீகி ஒன்றை, உணர்ந்தார்; தனது வேலையின் மூலமாக, தனக்கு எப்படிப்பட்ட மதிப்பு வந்தாக வேண்டும் என்று ஆசை கொண்டு, தான் விழுங்கப்பட்டு விட்டோம் என்று உணர்ந்தார்.
அது எங்கே செல்லாத ஒன்றாகி விடுமோ என்கிற ஒரு பயத்தினால், அந்த வேலையை, வைத்து தன்னை விடுதலை செய்யாமல் போனது குறித்து உணர்ந்தார்.
இராமயணக் கதையின் சாராம்சத்தைப் போற்றவில்லை என்கிற நிலையில் அவரது மனதின் முடிச்சு அவிழ்க்கப்படாமல் அப்படியே இருந்தது.
அவரது ராமாயணம், பேராசையின் ஒரு வெளிப்பாடு; ஆனால் ஹனுமானது ராமாயணம் தூய்மை, அர்ப்பணிப்பு மற்றும் அன்பினால் விளைந்த ஒரு விஷயம். எனவேதான், ஹனுமானின் இராமாயணம், மிகவும் மேம்பட்ட ஒன்றாக, போற்றப்பட்டது.
வால்மீகி உணர்ந்தார்;
*“ராமரை விடவும் மேலானது … என்றால் அது ராம் என்கிற நாமமே!* *“(राम से बड़ा राम का नाम).*
இங்கே இன்னும் கூட, ஹனுமான் போன்ற மக்கள் இருக்கின்றார்கள்; அவர்கள் தாங்கள் புகழ் பெற வேண்டும் என்று விரும்பாதவர்கள். அவர்கள், தமது கடமையை ஆற்றுகிறார்கள்; அவற்றின் குறிக்கோள், நிறைவேற்றப் படுகின்றன.
உண்மையில், புகழ்ந்து போற்றப் படாத “ஹனுமான்கள்” நம்மிடையே இருக்கின்றார்கள். … அம்மா, அப்பா, சகோதரர், சகோதரி, தாத்தா, பாட்டி, மனைவி, நணபர்கள்… நாம் அவர்களை, நினைவில் கொள்ள வேண்டும்; இன்னும், நாம் அவர்கள் எல்லோருக்குமே, நன்றி உடையவர்களாகவும் இருந்திட வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக