முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் யார்?

 ஒரு முறை பிச்சைக்காரர் ஒருவர், ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும் போது, சூட்டும், பூட்ஸும் அணிந்து, நேர்த்தியான உடையில் ஒரு வியாபாரி அமர்ந்து இருந்ததை, அந்த பிச்சைக் காரர் கவனித்தார். இவர் நினைத்தார்; அதாவது இவர் ஒரு பெரிய பணக்காரராகத்தான் இருக்க முடியும்; எனவே, அவர் நிச்சயமாக, நிறையவே பணம் தருவார்; நான் சென்று கேட்டால் கிடைக்கும். ஆகவே, அவர் போய் அந்த மனிதரிடம், பிச்சை கேட்டார்.

 அந்த மனிதன், அந்த பிச்சைக் காரனைப் பார்த்துக் கூறினார்,“நீ எப்போதும் பிச்சை எடுக்கிறாய்; மேலும் மக்களிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறாய்; நீ எப்போதாவது யாருக்காவது, எதையாவது கொடுத்திருக்கிறாயா?”

 அந்த பிச்சைக்காரர் கூறினார்,“சார், நான் ஒரு பிச்சைக்காரன். என்னால் மக்களிடம் பணத்தைக் கேட்க மட்டுமே முடியும். எவ்வாறு என்னால் ஏதாவது யாருக்காவது கொடுக்க முடியும்? “

 அந்த மனிதர் பதிலளித்தார்,” உன்னால் யாருக்கும் எதுவுமே கொடுக்க முடியாத போது, அதன் பிறகு, அது போலவே, உனக்கு அடுத்தவர்களிடம் எந்த ஒன்றையும் கேட்பதற்கு, எந்த உரிமையும் இல்லை. நான் ஒரு வியாபாரி மேலும் பண பரிவர்த்தனைகளில் மட்டுமே எனக்கு நம்பிக்கை உண்டு. உன்னால் ஏதாவது எனக்கு தர முடிந்தால், பிறகு நானும் கூட பதிலுக்கு ஏதாவது திருப்பிக் கொடுப்பேன்.

 சிறிது நேரத்தில், அந்த ரயில் ஒரு ஸ்டேசனுக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து, அந்த வியாபாரி இறங்கி, கிளம்பினார்.

 அந்த பிச்சைக் காரர், அந்த வியாபாரி சொல்லியது என்ன என்பது பற்றி, சிந்திக்க ஆரம்பித்து விட்டார். அவரது வார்த்தைகள் ஏதோ ஒரு வகையில், அந்த பிச்சைக் காரரது இதயத்தை சென்று அடைந்தது.

 அவர் நினைக்கத் தொடங்கினார். அதாவது நான் பிச்சை எடுப்பதில் பணம் நிறைய பெற முடியவில்லை. காரணம் என்னவென்றால், நான் யாருக்கும் எதுவுமே திரும்பக் கொடுக்க முடியாமல் ஆகி விட்டதுதான். ஆனால் நான் ஒரு பிச்சைக் காரன் என்கிற நிலையில், பதிலுக்கு, யார் ஒருவருக்கும், நான் எதுவுமே கொடுக்க முடியாமலே போய் விட்டது. அவர்களுக்கு எதுவுமே கொடுக்காமல், நான் எவ்வளவு காலம்தான், மக்களிடம் கேட்டுக் கொண்டே இருக்க முடியும். 

 ஆழமாக சிந்தித்த பிறகு, அந்த பிச்சைக்காரர் தீர்மானித்தார். அதாவது, எப்போதெல்லாம், அவர் பிச்சையாக சிலவற்றை பெற்றிடும் போது, அந்த மனிதருக்கு ஏதாவது ஒன்றை, திரும்பவும் கொடுக்க வேண்டும், என்று தீர்மானித்தார்.

 ஆனால் இப்பொழுது கேள்வி என்னவென்றால், பிச்சை எடுப்பதற்காக, அவர் மற்றவர்களுக்கு எதனைத் திருப்பிக் கொடுக்க முடியும்? இதை நினைத்துக் கொண்டே, அந்த நாள் முழுவதும் சென்றது. ஆனால், அவரால், இந்த கேள்விக்கு எந்தவிதமான பதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 அடுத்த நாள் அவர், ரயில்வே ஸ்டேசனுக்கு அருகில் உட்கார்ந்து இருந்த போது, அவரது கண்கள் ஸ்டேசனை சுற்றிலுமாக மலர்ந்திருந்த மலர்கள் மீது விழுந்தன. “நான் ஏன் பிச்சை தருபவர்களுக்கு, இந்த மலர்களை, திரும்பக் கொடுக்கக் கூடாது”, என்று நினைத்தார். 

 அவருக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. மேலும் பூக்களை அங்கிருந்து பறித்தார். ரயிலுக்குப் பிச்சை எடுப்பதற்காக போனார்.
 எப்போதெல்லாம், யாராவது இவருக்குப் பிச்சை கொடுத்தால், இவர் அவருக்குத் திரும்ப கொஞ்சம் பூக்களைக் கொடுப்பார். மக்கள் மகிழ்ச்சியோடு அந்த பூக்களை தங்களோடு வைத்துக் கொண்டார்கள்.

 இப்பொழுது அந்த பிச்சைக்காரர் தினமும், வழக்கம் போல, அந்த பூக்களைப் பறித்து, அவற்றை பிச்சை தருகின்ற மக்களுக்கு, திரும்ப விநியோகித்து விடுவார்.

 சில நாட்களுக்குள் அவர் உணர்ந்தார்; அதாவது இப்பொழுது அதிக அளவுக்கான மக்கள் இவருக்கு பிச்சை கொடுக்க ஆரம்பித்தார்கள். இவர் வழக்கமாக ஸ்டேசனுக்கு அருகில் உள்ள மலர்கள் அனைத்தையும் பறித்து விடுவார். இவரிடம் பூக்கள் இருக்கின்ற வரைக்கும், நிறைய மக்கள், இவருக்கு வழக்கமாக பிச்சை கொடுத்தார்கள். ஆனால், பூக்கள் இல்லாத போது, அவரால் நிறைய பெற்றிட முடிய வில்லை. மேலும் தினமும் இது தொடர்ந்தது. 

 ஒரு நாள் இவர் பிச்சை எடுக்கும் போது, அதே வியாபாரி, அந்த ரயிலில் உட்கார்ந்து இருப்பதை, இவர் பார்த்தார். அவரால்தான் இவர் தூண்டப்பட்டு, அது பூக்களை விநியோகிப்பதற்கு காரணமாக அமைந்தது.

 அந்தப் பிச்சைக் காரர் உடனே அவரிடம் சென்று கூறினார், “இன்று என்னிடம் கொஞ்சம் பூக்கள் இருக்கின்றன, உங்களுக்குக் கொடுப்பதற்கு; அதாவது பிச்சைக்குத் திருப்பிக் கொடுப்பதற்கு.”

 அந்த மனிதர் கொஞ்சம் பணம் கொடுத்தார்; அந்த பிச்சைக் காரரும், அவருக்குக் கொஞ்சம் பூக்களை திருப்பிக் கொடுத்தார். அந்த மனிதருக்கு, இந்த திட்டம் மிகவும் பிடித்திருந்தது. மேலும், இதனால் மிகுதியாக ஈர்க்கப்பட்டார்.

 அவர் கூறினார், “ யோவ்! இன்று நீயும் கூட என்னைப் போல ஒரு வியாபாரியாக மாறி விட்டாய்.” பிச்சைக் காரரிடம் இருந்து பூக்களை எடுத்துக் கொண்டு, அவர் அந்த ஸ்டேசனில், இறங்கி விட்டார்.

 ஆனால் திரும்பவும் ஒரு முறை, அவரது வார்த்தைகள், அந்த பிச்சைக்காரரின் இதயத்திற்குள் ஆழமாகச் சென்றன. அவர் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருந்தார். அந்த மனிதர் என்ன சொல்லி விட்டுப் போனார்; மேலும் மகிழ்ச்சியாக மாறுவதற்கு ஆரம்பித்து விட்டார்.

 அவரது கண்கள் இப்போது பிரகாசிக்கத் தொடங்கி விட்டன. அதாவது அவர் இப்போது, வெற்றிக்கான சாவியை பெற்று விட்டதை உணர்ந்தார்; அது அவரது வாழ்க்கையை மாற்றச் செய்திடும்.

 அவர் உடனே இரயிலில் இருந்து இறங்கினார்; மேலும் வானத்தை உற்சாகமாகப் பார்த்தார்; மேலும் உரத்த குரலில் கூறினார்,“ இனிமேல், நான் ஒரு பிச்சைக் காரன் இல்லை; நான் ஒரு வியாபாரி. இப்பொழுது, நானும் கூட அந்த பெரிய மனிதரைப் போல மாறுவேன். நானும் கூட பணக்காரனாக மாற முடியும்.“

 மக்கள் அவரைப் பார்த்த போது, அவர்கள் நினைத்தார்கள்; அதாவது இந்த பிச்சைக் காரனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. அடுத்த நாளில் இருந்தே, அதாவது, அந்த பிச்சைக்காரரை, மீண்டும் ஒரு போதும், அந்த ரயில் நிலையத்தில் காண முடியவில்லை.

 நான்கு வருடங்கள் கழிந்த பிறகு, ஒரு நாள், இரண்டு மனிதர்கள் சூட் அணிந்த உடையில் அதே ரயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்து கொண்டு இருந்தார்கள். இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பொழுது, அவர்களில் ஒருவர் மற்றவருக்கு தலை வணங்கி, கைகளைக் குவித்துக் கேட்டார்,“ என்னை உங்களுக்கு அடையாளம் காண முடிகிறதா?”

 அடுத்தவர் பதிலளித்தார்,“ இல்லை! நாம் முதல் தடவையாக, இப்போதுதான் சந்திக்கிறோம் அல்லவா.”

 அந்த முதல் மனிதர் மீண்டும் கூறினார்,” சார், முயற்சி செய்து ஞாபகப்படுத்திப் பாருங்கள்; நாம் முதல் தடவையாக சந்திக்கவில்லை; ஆனால், மூன்றாவது தடவையாக சந்திக்கிறோம்.“

 இரண்டாவது மனிதர்,“ பரவாயில்லை; என்னால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. இதற்கு முன்பாக நாம் எப்போது, சந்தித்தோம்?”

 இப்பொழுது, அந்த முதல் மனிதர் புன்னகையோடு கூறினார், “முன்னால், இதே ரயிலில் நாம் இருவரும் இரு முறை சந்தித்தோம். நானே அந்த, அதே பிச்சைக் காரன்; முதல் சந்திப்பில் நீங்கள் கூறினீர்கள்; நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொன்னீர்கள். மேலும், இரண்டாவது சந்திப்பில், நான் யார் என்பதை உண்மையிலேயே கூறினீர்கள்.” 

 “ அதன் விளைவாக, இன்று நான் ஒரு பெரிய பூ வியாபாரியாக இருக்கிறேன். இதே வியாபாரத்திற்காக, நான் அடுத்த பட்டணத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறேன்.

 “முதல் சந்திப்பில், நீங்கள் எனக்கு இயற்கையின் அந்த சட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறினீர்கள்.. .. அதன் படி, நாம் எதையாவது கொடுத்தால் மட்டுமே, நாம் எதையாவது பெற்றிட முடியும்.
பணப் பரிவர்த்தனையின், இந்த சட்டம் உண்மையில் வேலை செய்கிறது; இதனை நான் நன்றாக, உணர்ந்தேன். ஆனால் என்னை நானே எப்போதும் ஒரு பிச்சைக் காரனாகவே நினைத்தேன்; இதற்கும் மேலாக உயர வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை.

 நான் உங்களை இரண்டாவதாக சந்திக்கும் போது, நீங்கள் என்னிடம் கூறினீர்கள். அதாவது, நான் ஒரு வியாபாரியாக மாற வேண்டும் என்றீர்கள். உங்களுக்கு நன்றிகள்; அந்த நாளில் இருந்தே, என்னுடைய அணுகுமுறை மாறி விட்டது. மேலும் இப்போது, நான் ஒரு வியாபாரியாக ஆகி விட்டேன்; இனிமேலும் நான் ஒரு பிச்சைக்காரன் இல்லை.”

 இந்திய ஞானிகள் பெரும்பாலும் வலியுறுத்தி, ‘உங்களை அறிந்து கொள்ளுங்கள்’ என்று அழுந்தக் கூறுவது உண்டு.

 அந்த பிச்சைக் காரன் தன்னை, தான் ஒரு பிச்சைக் காரராக, கருதிக் கொண்டு இருக்கின்ற வரைக்கும், அவர் ஒரு பிச்சைக் காரராகவே இருந்தார். அவரை அவர் ஒரு வியாபாரி என்று கருதும் போது, அதுவாக ஆகிறார். இது போல, எந்த ஒரு நாளில், புரிந்து கொள்கின்றோமோ, அதாவது, அவரே நான் என்று அறிந்து கொள்கிறோமோ, அதன் பிறகு, அறிந்து கொள்வதற்கும் சரி, புரிந்து கொள்வதற்கும் சரி, என்னதான் இருக்கப் போகிறது?

 வாழ்க்கை என்பது ஏற்றுக் கொள்வது என்கிற ஒரு கலையாகும். நாம், தொடர்ந்து கற்றுக் கொண்டாக வேண்டும்; சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி அனுசரித்து செல்லவும், மனவருத்தம் அடைந்து கொள்ளாமலும் இருந்திட வேண்டும். யாருமே முழுமையானவர் என்று இல்லை. நம்முடைய குறைபாடுகளால், நாம் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு இருக்கின்றோம். நாம் முழுமைத்துவத்தை விரும்பினால், முதலில் நாம் கேட்க வேண்டியது, நான் முழுமையானவனாக இருக்கிறேனா? என்பதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...