ஒரு அதிகாலைப் பொழுதில், நானும் என் மனைவியும் விசாகப் பட்டினம் இரயில்வே ஸ்டேசனில், இருந்து கிளம்புகின்ற, ஜென்ம பூமி ரயிலில் ஏறினோம். ராஜ முந்திரியில், நடக்க இருக்கும், எனது நண்பரது மகளின் திருமணத்திற்காகபுறப்பட்டோம்.
அதிகாலை தென்றல் காற்றும், மேலும் இரயிலின் முன்னும் பின்னுமான அசைவும், நிதானமாக இருந்தது; மேலும் நாங்கள் உறங்கத் தொடங்கினோம்; அந்த ரயில், டுனி ஸ்டேசனில் நிற்கும் வரை உறங்கினோம். ரயில் பெட்டியைக் கடந்து சென்று கொண்டு இருக்கின்ற விற்பனையாளரை அழைத்தேன்; இரண்டு கப் காஃபிக்கு ஆர்டர் செய்தேன். ஒன்றை, என் மனைவியிடம் கொடுத்தேன்; ஒரு சிப் அருந்தினேன். காஃபியின் ருசியைப் பாராட்டி, அவரைப் புகழ்ந்தேன்; ‘விலை என்ன என்று கேட்டேன்?”. அவர், 20 ரூபாய் என்று சொன்னார். நான் என் பர்ஸைத் திறந்து, அதில் இருந்த ஒரு 200 ரூபாய் நோட்டை எடுத்தேன்; நான் அவரிடம் அந்த 200 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.
“உங்களிடம் சில்லறை இல்லையா? அவர் கேட்டுக் கொண்டே, அந்த ஃபிளாஸ்கை கீழே வைத்து விட்டு, அவரது சட்டைப் பையில், இருந்து சில்லறையைத் தேடிக் கொண்டு இருந்தார். அந்த ரயில், அவர் சில்லறையை, தனது பாக்கெட்டில் இருந்து எடுப்பதற்கு முன்பாகவே, கிளம்பத் தொடங்கி விட்டது; வேகமாக ஓட ஆரம்பித்தது. எங்களது கம்பார்ட்மெண்ட் எஞ்சினுக்கு அடுத்தாற் போல இருந்தது. எனவே, அவரால் ரயிலுக்குப் பின்னாலே, ஓடி வந்தாலும், அவரால் கொடுக்க முடியாத ஒரு நிலை. ஆகவே, சில்லறையைக் கொடுப்பதற்கு, அவருக்கு, சந்தர்ப்பமே கிடைக்காமல் போனது.
நான் என்னையே குற்றஞ் சாட்டினேன். சில்லறை இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்த பிறகல்லவா, நான் காஃபிக்கு ஆர்டர் செய்து இருக்க வேண்டும்.
“ ஓ, என் கடவுளே! நான் நினைக்கின்றேன், “ நீ எவ்வளவு தூரம் முட்டாள் தனமாக இருந்துள்ளாய். நீ சில்லறையைப் பெற்றுக் கொண்ட பிறகு அல்லவா, ரூபாய் நோட்டைக் கொடுத்து இருந்திருக்க வேண்டும். உன், வயது மற்றும் அனுபவம் இவற்றால் என்னதான் பயன்?” என்று என் மனைவி, என்னை மட்டம் தட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது என்பதில், மகிழ்ச்சியோடு இருந்தாள்.
என்னுடைய செயலை நியாயப் படுத்திட, நான் முயற்சி செய்தேன். “ஓ.கே. ஒரு வேளை, அவன் என்னிடம் சில்லறையைக் கொடுத்து விட்டான். ஆனாலும், நான் எனது பணத்தை எடுத்துக் கொடுப்பதற்கு முன்பாக, ரயில் கிளம்பி விட்டது என்றால், அதன் பிறகு, அது, அவருக்கு பெரும் இழப்பாக இருந்திருக்கும் அல்லவா?“
“என்ன பெரிய நஷ்டம்? காலையில் இருந்தே, உங்களை மாதிரி ஒரு 10 நபர்களை அவர் சந்தித்து இருப்பார்; மேலும் இந்த நாளின் முடிவில் அவருக்கு லாபம் மட்டுமே கிடைத்து இருக்கும்; நஷ்டம் கிடையாது!” இது என் மனைவியின் பதில். அவளது முகத்தில், ஒரு ஏளனப் புன்னகை தென்பட்டது.
“நாம் மக்கள் மீது நம்பிக்கை வைத்தாக வேண்டும்; ஏழை மனிதர், இரயில் புறப்பட்டு விட்டது என்றால், அவரால் என்ன செய்ய முடியும்? நமது பணத்தை வைத்து வாழ்ந்திடவா போகிறார்?”
எனது வாழ்க்கைத் துணை, நான் அவருக்கு ஆதரவு காட்டியதைப் பார்த்து, எரிச்சல் உற்றாள். “அவர்கள், இது போன்ற சந்தர்ப்பங்களுக்காகவே காத்திருப்பார்கள். உங்களை மாதிரி, ஒரு நான்கு மூடர்களை, அவர் சந்தித்தால், அதுவே போதுமானது; ஒரு நாள் வருவாய் சம்பாத்தியம் சாத்தியம்; கூசும் கண்களோடு என்னைப் பார்த்து முணுமுணுத்தாள். ஒரு ஞானியிடம் இருக்கும் அமைதியை, நான் கொண்டிருந்தேன்.
“எந்த வகையிலும், அவரிடம் உங்களைப் போல, நேர்மை மற்றும் கோட்பாடுகளை, நீங்கள் எதிர்பார்க்க முடியாது”என்று அவள் கூறிவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தாள்; அங்கே, மற்ற எல்லா சக பயணிகளும், எங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
அந்த ரயில், வேகம் எடுத்து சென்றது; மேலும் நாங்கள் அடுத்த ரயில் நிலையம், அன்னாவரம் கடந்து சென்றோம்.
அந்த பாக்கியை நான் பெற்றுக் கொண்டு விடுவேன் என்று,
நான் வைத்திருந்த அந்த மெல்லிய நம்பிக்கையும், படிப்படியாக, விட்டுச் செல்ல ஆரம்பித்தது.
எனது மனைவியின் நம்பிக்கை, என்னவெனில், நான் மக்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் இரக்கம் உள்ளவனாகவும், மக்கள் மீது அனுபவம் இல்லாத நம்பிக்கை கொண்டு இருப்பதாலும், ஏமாற்றப் பட்டு விடுகிறேன் என்று நினைத்தாள். அவள் என்னை இப்படி செய்வது எனக்கு முற்றிலும் பழக்கமாகிப் போய் விட்ட ஒன்று. என்னை திட்டி கீழே விழச் செய்வது. இருந்தும் நான் நம்புகிறேன். அதாவது அவள் அடுத்தவர்கள் மீது அவநம்பிக்கை கொண்டு இருப்பது சரியானது அல்ல என்று, நான் உறுதியாக நம்புகிறேன். அதாவது நாம் அடுத்தவர்களிடம் இருக்கும் நல்ல தன்மையை பார்த்திட வேண்டும். யாரிடமாவது இது குறைவாக இருக்கின்றது என்றால், அது அவர்கள் வளர்ந்து வந்த சுற்றுப் புற சூழ்நிலைகளே, அவற்றின், அடிப்படைக் காரணமாக இருக்கும். நான் நம்புகிறேன்.
அதாவது, நம் ஒவ்வொருவருள்ளும் அங்கே நல்ல மற்றும் தீயது ஆகிய இரண்டு ஆற்றல் வளங்கள் இருக்கின்றன. எதனை நாம் தெரிவு செய்கிறோம் என்பது, சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்தது ஆகும். இது போன்ற நிறைய சந்தர்ப்பங்களில், அவளால் நான் செய்தது தவறு என்று நிரூபிக்கப்பட்ட போதிலும், இது என்னுடைய பற்றுறுதியை எவ்விதத்திலும், பாதிக்க வில்லை. நான் நம்புகிறேன்; அதாவது தர்மம் அல்லது நீதியானது அதனுடைய நாலாவது காலான உண்மைத் தன்மையினால் நிலை நிறுத்தப் படுகிறது.
“ இது போகட்டும்! ஏழை மக்கள் அவர்கள்! நம்முடைய இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு, அவர்கள் என்ன அரண்மனையையா கட்டி விடப் போகிறார்கள்.? அதனை மறந்து விடு.” நான் அவளை சமாதானப் படுத்தும் முயற்சியில், இதனைக் கூறிட முயன்றேன். என் மீது அவள் கொண்டிருந்த அன்பு, அவளை அமைதி கொள்ள வைத்தது; எனக்கோ, இந்த உரையாடலை மேலும் மென்மேலும் நீட்டிக்கும் நினைப்பில் இல்லை.
அந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் பயணிகள் நின்று கொண்டு நிரம்பி வழிந்தார்கள். நான் என் கண்களை வெளிப்புறமாக ஓடிக் கொண்டு இருக்கிற வயல் வெளிகளின் மீது நழுவ விட்டேன். அதற்குள் என்னுடைய சக பயணிகளில் நிறைய பேர், என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்; அவரவர்கள், அறிவுக்குத் தக்கவாறு, என்னை மதிப்பீடு செய்ய தொடங்கி விட்டார்கள். அவர்களில் சிலர் என்னை, ஒரு முட்டாள் என்று நினைத்திட ஆரம்பித்தார்கள்; இன்னும் சிலரோ, என் மீது பரிவு மற்றும் இரக்கம் கொண்டார்கள். சில பேருக்கு, அது தங்களுக்குக் கிடைத்த ஒரு இலவசமான பொழுது போக்கு அம்சமாக இருந்தது; அது பற்றி அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இன்னும் சிலர், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க தீவிர ஆர்வத்துடன் இருந்தார்கள். இந்த சமயத்தில், அந்த இரயில், பிதாபுரம் புறநகர்ப் பகுதியை சென்று அடைந்தது. எங்கள் மீது கொண்டிருந்த ஆர்வத்தை எல்லோருமே இழந்து விட்டார்கள்; தாங்கள் தத்தம் நினைவுகளில் மூழ்கலானார்கள்.
அந்த நேரத்தில், நான் ஒரு குரலைக் கேட்டேன்,“சார், நீங்கள்தானே, இரண்டு காஃபிகள் வாங்கியவர்; அதற்கு 200 ரூபாய் நோட்டைக் கொடுத்தவர்?“
நான் அந்த குரலை நோக்கி திரும்பினேன். அந்தக் கூட்டத்தை தள்ளிக் கொண்டு, ஒரு பதின்மவயது பையன் வந்தான்; அவன் எனது சீட்டுக்கு முன்பாக வந்து நின்று விட்டான். திடீரென்று நான் மகிழ்ச்சியால் உயர்ந்தேன் என்பதை உணர்ந்தேன்; அவனைப் பார்த்தால், காஃபி விற்பனை செய்த, வியாபாரி போல காணப்படவில்லை; இருந்த போதிலும், அவர் ஒரு நடுத்தர வயதுக் காரர் போல இருந்தார், என்பதை, நினைவில் வைத்து இருந்ததை எண்ணிப் பார்த்தேன்.
“ஆமாம், மகனே! நான்தான் 200 ரூபாய் நோட்டை, காஃபி விற்பனை செய்யும் ஒருவரிடம் கொடுத்தேன். ஆனாலும், சில்லறையை, திருப்பி வாங்கிடும் முன்பாக, ரயில் கிளம்பிச் சென்றது. இருந்தாலும், நான் உன்னிடம் காஃபி வாங்கியதாக எனக்கு ஞாபகம் இல்லை”. நான் நேர்மையாக சொன்னேன்.
“சரிதான், சார்! ஆனால், டுனி நிலையத்தில், காஃபி வாங்கி குடித்த அந்த நபர், நீங்கள்தானே”, திரும்பவும் அவன் என்னிடம் வினவினான்.
“நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? நீ விரும்பினால், இங்கே, இருக்கின்ற இந்த மக்களிடம் நீ கேட்க முடியும்.“
“ இல்லை! இல்லவே இல்லை சார்! நான் உங்கள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால், தவறு ஏதும் நடக்காமல் இருப்பதற்காக, நான், சற்று உறுதிசெய்து கொள்கின்றேன்!”
இதைக் கூறிக் கொண்டே, அவன் 180 ரூபாய்க்கான சில்லறையை, தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து, அதனை என்னிடம் கொடுத்தான்.
“ நீ யாருப்பா …. ?”
“ சார், நான் அவருடைய மகன். “
நான் ஆச்சரியம் மிளிர, அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். என்னுடைய சந்தேகத்தை அவன் யூகித்துக் கொண்டான், என்பது தெரிந்தது.
“சார், தினந்தோறும், டுனி ஸ்டேசனில், இது போன்ற சம்பவங்கள், ஒன்றிரண்டு நடக்கவே செய்கின்றன; காரணம் என்னவெனில், அங்கே ரயில் நிறைய நேரம் நிற்பது இல்லை. இந்த குறுகிய இடைவெளி நேரத்தில், நிறைய மக்கள் பயத்தால், ரூபாய் நோட்டைக் கொடுத்து விடுவார்கள். மேலும் சில்லறையை அவர்கள் பெற்றுக் கொள்ளும் முன்பாக, ரயில் கிளம்பி விடும். அதனால்தான், நான் வழக்கமாக இந்த ரயிலில் ஏறி காத்து இருப்பேன். என்னுடைய அப்பா, அந்த குறிப்பிட்ட நபர்களின் விபரத்தை, எனக்கு ஃபோன் செய்தி மூலம் கொடுப்பார்; (பணம், கம்பார்ட்மெண்ட் எண், மற்றும் சீட் எண்) யாருக்கு சில்லறை கொடுக்க வேண்டும் என்பது இருக்கும். நான் சில்லறையைக் கொடுத்து விட்டு, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடுவேன். பிறகு அடுத்த ரயிலில் ஏறி, டுனிக்குத் திரும்பி இறங்கி விடுவேன். என் அப்பா, இம்மாதிரியான பிரச்சனை, அறிவுறுத்தல்களுக்காக, என்னிடம் கொஞ்சம் சில்லறை கொடுத்து வைத்து இருப்பார்.”
நான் திகைத்துப் போனேன்; ஆனால் என்னை சரி செய்து கொண்டு, கேட்டேன்,“நீ படித்துக் கொண்டு இருக்கிறாயா?”
“ பத்தாம் வகுப்பு, படிக்கிறேன் சார்! என்னுடைய மூத்த சகோதரர், பிற்பகல், எனது அப்பாவுக்கு உதவி செய்வார்; காலை வேளைகளில், நான் அப்பாவுக்கு உதவி செய்து வருகிறேன்.”
நான் இதனைக் கேட்டவுடன், “அவனுடைய அப்பாவிடம் பேச வேண்டும் என்று விருப்பம் கொண்டேன்; ஆகவே அவனிடம் அவனது அப்பாவின் ஃபோன் நம்பரை வாங்கி, அதனை டயல் செய்தேன்.
உங்களுடைய மகன் இப்போது, சற்று முன்னர், 200 ரூபாய் நோட்டுக்கான சில்லரையைத் திருப்பி தந்து விட்டான். நான் இப்போது அழைத்தது, என்னுடைய பாராட்டுதலை, உங்களுடைய செயலுக்காக, வெளிப்படுத்துவதற்காகவே. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அதாவது, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு, கல்வியை மட்டும் கற்பிக்கவில்லை; ஆனால், அவர்களது, மனதில் நீதி நெறிகள், நேர்மையின் ஒழுக்க முறைகள் இவற்றையும் உணர வைத்து இருக்கின்றீர்கள்.” அவரைப் புகழ்ந்து கொள்ளும் பொருட்டு நான் சொன்னேன்.
நீங்கள் பேசுவது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார்! நான் கௌரவிக்கப் படுவதாக உணர்கிறேன். அதாவது உங்களுடைய பாராட்டுதலை வெளிப்படுத்துவதற்காக, நீங்கள் சிரமம் எடுத்துக் கொண்டு, என்னை அழைத்தீர்கள். நான் படித்தது 5 வது வகுப்பு வரைதான். அந்த காலங்களில், நெறிமுறைகள் மற்றும் ஒழுக்க முறைகள் பற்றிய சிறுகதைகள், நமது பாடங்களில் எடுத்துக் கூறப்பட்டு இருக்கும். மேலும் பாடப்புத்தகங்களில் பாடங்களோடு, நேர்மை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றை வற்புறுத்திக் கூறுகின்ற விதமாக இருக்கும். ஆகவே, நாம் நல்லது மற்றும் கெட்டது இவற்றிற்குரிய வேறுபாடுகள் பற்றி, கற்றுக் கொண்டோம். அந்தக் கோட்பாடுகள் தான், நம்மை, நமது கஷ்டங்களின் போது, அவற்றில் இருந்து விடுபட்டு நேர்மையான வாழ்க்கையை தொடர்ந்து வாழ்வதற்கு வழி வகுத்தன. ஃபோனில், அவருடைய வார்த்தைகளைக் கவனிக்கும் போது, நான் அவருடைய வார்த்தைகளாலும், அவருடைய செயல் முறைகளின் நினைவுகளாலும், பெரும் வியப்பில் ஆழ்ந்தேன்.
அவர் தொடர்ந்தார்,“ ஆனால் இன்று, இம்மாதிரியான கருத்துக்கள் பள்ளிகளில் கற்றுத் தரப்படுவது இல்லை. குழந்தைகள் இந்த நாட்களில் என்ன கற்கிறார்கள் – ஆரோக்கியமற்ற, காரசாரமான, நறுமண உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டு இருப்பது போல. என்னுடைய குழந்தைகள் வீட்டில் படித்துக் கொண்டு இருக்கும் போது, நான் அவர்களை வழக்கமாக, கவனிப்பேன்; மேலும் தெரிந்து கொண்டேன். இந்த பாடத்திட்டத்தில் வெகுநாட்களாக, நீதி நெறிக் கதைகளோ, உத்வேகம் தருகின்ற பாட்டுக்களோ அல்லது குழந்தைகளுக்காக பரவஸ்து சின்னயாசுரி போன்ற தெலுங்கு எழுத்தாளர் எழுதிய கதைகளோ இருப்பதில்லை. எந்தவிதமான நன்னெறியும் இல்லை. ஆகவேதான், நான் அவர்களுக்குப் பொறுப்பை உணர்த்தும்படியாக, இது போன்ற சிறிய வேலைகளைக் கொடுக்கிறேன். எனக்குத் தெரிந்த நன்னெறிகளை அவர்களுக்கும் தெரியும்படி செய்கிறேன். அவ்வளவுதான்! நான் இந்த மனிதரின் தொலை நோக்குப் பார்வையை கவனித்து பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். மேலும் சற்றே, அந்த மகனின் தோள்களில் தட்டிக் கொடுத்தேன்.
அந்தப் பையன் திருப்பிக் கொடுத்த அந்த 180 ரூபாயை, நான் பர்ஸில் வைக்கும் போது, எனது முகத்தில் பிரகாசித்த ஆனந்தத்தை, என் மனைவி திகைப்போடு பார்த்தாள். அவள் மன்னிப்புக் கேட்கும் விதமாக சங்கடத்தோடு புன்சிரிப்பை சிந்தினாள். ஏனென்றால், அவளுக்குத் தெரியும்; என் முகத்தில் தெரிகின்ற மகிழ்ச்சி வெறுமனே, பணத்தை திரும்பிப் பெற்றதற்காக மட்டுமல்ல!
நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன்; அதாவது ஸ்ரீமத் பாகவதத்தில் நீதி அல்லது தர்மாவை நந்தியாக வர்ணிக்கின்றார்கள். அந்த காளை, அது நான்கு ‘கால்களில்’ நிற்கின்றது – சிக்கனம், தூய்மை, இரக்க உணர்வு மற்றும் நம்பிக்கை அல்லது உண்மைத் தன்மை ஆகியவை. அந்த பாகவதம் இன்னமும் கூட கணித்துக் கூறுகிறது. அதாவது நான்கு கால்கள் எல்லாமும், எல்லா யுகத்திலும், ஒன்று போல வலிமையாக இருப்பது இல்லை. யுகங்கள் செல்லச் செல்ல, நீதியின் அளவு குறைந்து கொண்டே வருவதை அது குறிப்பிடுகிறது. சத்திய யுகத்தில், உலகத்தில் அது அபிவிருத்தி அல்லது வளர்ச்சியின் முதல் நிலை; அந்தக் காளை நான்கு கால்களின் மீது உறுதியாக நிற்கிறது; ஆனால் அந்த யுகங்கள் மாறி வருகிறது; ஒன்றன் பின் ஒன்றாக அந்த கால்கள், உடைய ஆரம்பிக்கின்றன; கடைசியாக இருப்பது, கலியுகம் ஆகும். (தற்போது இருக்கின்ற காலம்); அங்கே உண்மைத் தன்மை அல்லது பற்றுறுதி, தர்மம் அல்லது நீதி என்கிற வடிவத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த எளிமையான காஃபி விற்பனையாளரது செயல்பாடு ஒரு நிரூபணமாகத் தென்படுகிறது; அதாவது, தனது தருமத்தின் நான்காவது காலின் வழியே என்ற போதிலும், அது கணித்திட்ட அளவில், நேர்மை அல்லது தர்மம், இந்த உலகத்தில் இன்னமும் வளமோடு செழுமையாகவே இருக்கின்றது. அந்த கம்பார்ட்மெண்டில், அந்த பையன், சென்று கொண்டு இருப்பதைக் கண்ட நான், அந்த காஃபி விற்பனையாளரை, என் மனதார போற்றி, வணக்கம் செலுத்தினேன்!
குறிக்கோள் என்பதன் தூய்மை, மற்றும் நோக்கம் என்பதன் தூய்மை, ஆகியவை நம்மை, வெகு தொலைவுக்கு இட்டுச் செல்லும். உள்முக தூய்மை என்றளவில், மற்றவர்களிடம் நான் தூய்மை மற்றும் நேர்மையை இட்டு நோக்கும் முன்பாக எனது உள்முக தேடலில் நான் நேர்மையாக இருந்தாக வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக