முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாதிரியாரின் மகன்

ஒவ்வொரு ராஜ்ஜியத்திலும் ஒரு மதப் போதகர் இருப்பது வழக்கம். அந்த ராஜ்ஜியத்திலும் ஒரு மத போதகர் இருந்தார். அவருடைய அறிவுப் புலமையால், அவரை அனைவரும் நன்கு அறிந்திருந்தனர். அவருடைய அறிவு மற்றும் விவேகத்தைப் பற்றி எல்லா இடங்களிலும் அனைவரும் புகழ்ந்து கொண்டு இருந்தார்கள். 
ஒரு நாள், அரசர் அந்த மத போதகரை தன் அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். மத போதகர் அங்கு சென்ற போது, அரசர் அவரிடம் அனைத்து விஷயங்களைப் பற்றி, நீண்ட ஆழமான விவாதம் செய்தார். விவாதம் முடிந்த பிறகு மதப் போதகர் விடை பெறும் போது, அரசர் அவரிடம், “ஐயா! நீங்கள் அனுமதித்தால் நான் உங்களிடம் சில விஷயங்கள் கேட்கலாமா?” என்றார்.
 பாதிரியார் கேளுங்கள் அரசரே என்று பணிவுடன் கூறினார்.
“ஐயா, நீங்கள் மிகவும் அறிவாளியாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் மகன் ஏன் பெரிய முட்டாளாக இருக்கின்றான்?” என்று கேட்டார். இந்த எதிர் பாராத கேள்வியால் மதப் போதகர் மிகவும் வெட்கப்பட்டார். அவர் அரசரிடம், “அரசரே, ஏன் இப்படிக் கூறுகின்றீர்கள்?” என்றார். “ஐயா, தங்கம், வெள்ளி இவை இரண்டில் எது மதிப்பு வாய்ந்தது என்பது கூட, உங்கள் மகனுக்குத் தெரியவில்லை!” என அரசர் வியப்புடன் கூறினார்.
இதைக் கேட்ட சபையினர் அனைவரும் சிரித்தனர். மதப் போதகர், அவர்கள் ஏளனமாக சிரிப்பதைப் பார்த்து வெட்கமும், அவமானமும் அடைந்தார். எதுவுமே கூறாமல், அமைதியாக வீடு திரும்பினார்.
மிகவும் மன வருத்தத்தோடு இருந்தார்.
 அரசரது சொற்களும், சபையினரின் சிரிப்பும் அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.
இவர் வருத்தமாக இருப்பதைப் பார்த்த அவரின் மகன், “அப்பா! ஏன் மிகவும் வருத்தமாக இருக்கின்றீர்கள்?” என்று கேட்டான்.    
அவர், “மகனே! உன்னிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? “ என்றார். கேளுங்கள் அப்பா, என்று மகன் கூறினான். தங்கம், வெள்ளி இவை இரண்டில் எது மதிப்பு வாய்ந்தது என்று கூட உனக்குத் தெரியாதா? என்று மகனிடம் அவர் கேட்டார்.
தங்கம்தான் மதிப்பு வாய்ந்தது என்று மகன் கூறினான்.
 அவன் பதிலைக் கேட்டு, தந்தை சிறிது ஆறுதல் அடைந்தார். நீ சரியான பதிலைத்தான் கூறினாய். ஆனால், அரசர் ஏன் உன்னை முட்டாள் என்று கூறினார்? உனக்கு தங்கம், வெள்ளி இரண்டின் மதிப்புக்கும் வித்தியாசம் தெரியாது என்று கூறினார்.
சபையில் நடந்த சம்பவம் அனைத்தையும், தந்தை சொல்வதன் மூலம் கவனித்த பிறகு, தன் தந்தையின் கவலைக்கான காரணத்தை அவன் புரிந்து கொண்டான்.
ஒவ்வொரு நாள் காலையிலும், அரசர் பொது மக்கள் குறையைக் கேட்டு தீர்ப்பதற்காக கூட்டம் போடும் இடம் வழியாகத்தான், நான் பள்ளிக்கு செல்வேன். அங்கு அறிவு நிறைந்த சான்றோர்கள், பலவிதமான தலைப்புக்களில் விவாதித்துக் கொண்டு இருப்பார்கள். நான் அந்த வழியாகப் போகும் போது, அரசர் என்னை அழைப்பார்; ஒரு கையில் வெள்ளி நாணயத்தையும், மற்றொரு கையில் தங்க நாணயத்தையும் வைத்துக் கொண்டு, இதில் எது அதிக மதிப்பு வாய்ந்ததோ, அதை நீ எடுத்துக் கொள் என்பார். நான் தினமும், வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொள்வேன். அங்குள்ள அனைவரும் என்னை அவமானப்படுத்தி சிரிப்பார்கள். 
 நான் அமைதியாக அங்கிருந்து வெளியேறி விடுவேன்.
இதைக் கேட்ட மதப் போதகர் முழுவதுமாக குழப்பம் அடைந்தார். அவர் தன் மகனிடம்,“ மகனே! உனக்கு வெள்ளியை விட தங்கம்தான் மதிப்பு வாய்ந்தது, என தெரியும். ஏன் நீ தங்க நாணயத்தை எடுக்கவில்லை? அவர்கள் முன் உன்னை நீயே ஏன் முட்டாளாக்கிக் கொண்டாய்? உன்னால், நானும் அல்லவா அவமானப் பட்டேன்”, என்றார்.
மகன் சிரித்து விட்டு, “அப்பா, என்னுடன் வாருங்கள்.
 இப்படி நான் நடந்து கொண்டதற்கான காரணத்தை கூறுகிறேன் என்றான் “. அவன் தன் அப்பாவை அந்த நகரத்தின் வெளியே இருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான். அந்த இடம் வீடே இல்லாத ஏழை மக்கள், வசிக்கும் பகுதியாகும். இந்த பையனைப் பார்த்தவுடன் அந்த மக்களின் முகம் மகிழ்ச்சி யடைந்தது. இவனை அன்போடு வாழ்த்தினார்கள். தன் மகனை மக்கள் அனைவரும் ஆசீர்வதிப்பதைப் பார்த்து தந்தை வியப்பு அடைந்தார்.
தன் அப்பாவைப் பார்த்து, “அப்பா, இவர்களில், நிறைய பேருக்கு ஒழுங்கான வேலை இல்லை; நாள் முழுவதும் சாப்பிடக்கூட எதுவும் இல்லை. நான் ஒவ்வொரு முறையும் அரசரிடம் எடுக்கும் வெள்ளி நாணயத்தை, இவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுத்து விடுவேன்.
 இவர்களுக்கு அந்த நாணயம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. அந்த ஒரே நாணயத்தை வைத்து, இவர்களில் நிறைய பேரால், தினமும் உணவு சாப்பிட்டு பசியாறிட முடிந்தது. பசி தீர்ந்ததால், அவர்கள் ஏதாவது ஒரு வேலையை செய்ய முடிகிறது.    
அரசருக்கும் அவரது அவையினருக்கும் தினமும் என்னை நிறுத்தி, கையில் தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து, ஒரே கேள்வியை தினமும் கேட்பது வேடிக்கையான விளையாட்டாய் இருக்கிறது. அடிக்கடி இவ்வாறு செய்கிறார்கள். 
 நான் எப்போதும் வெள்ளி நாணயத்தை மட்டும்தான் எடுப்பேன்.
நான் தங்க நாணயத்தை எடுத்தால், அன்று இந்த விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்து விடும். என்னால், இந்த ஏழை மக்களுக்கு உதவி செய்ய முடியாமல் போய் விடும். இதனால்தான் நான் தங்க நாணயத்தை எடுக்காமல் இருந்தேன் என்றான்.
அந்த மதப் போதகர், தன் மகனைப் பற்றி மிகவும் பெருமைப் பட்டார். 
 அரசர் நடத்திய விளையாட்டில் தன் மகன் எடுத்த முடிவு நல்லது என உணர்ந்தார். அரசரிடம் சென்று, இந்த உண்மையைக் கூறுவது முக்கியம் என உணர்ந்தார். தன் மகனை அழைத்துக் கொண்டு, அரச சபைக்கு சென்றார். அங்கே, அந்தப் பையன் அரசரிடம் எல்லாவற்றையும், விவரித்துக் கூறினான். தங்கத்தின் மதிப்பைத் தெரிந்திருந்தும், தான் வெள்ளி நாணயத்தை எடுத்தமைக்கான காரணத்தையும் விவரித்தான்.
அந்தப் பையனின் விவேகம், இரக்கம், பரிவு இவற்றால் அரசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
 ஒரு பெட்டி நிறைய தங்க நாணயங்களை கொண்டு வர உத்தரவிட்டார். அந்தப் பெட்டியை அந்தப் பையனிடம் கொடுத்து,“நீ தான் உண்மையான அறிவாளி” என்றார்.
தன் பணியாளர்களிடம், அந்த மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் படி உத்தரவிட்டார்.
நம்முடைய திறமையைப் பற்றி பெருமையாகக் கூறாமல், நாம் ஒரு வேலையை செய்வோம் என்றால், நம்மால் நமக்கும், நம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் உதவி செய்ய முடியும்.
காலம் வரும் போது, இந்த உலகமே நீ தகுதி வாய்ந்தவன் என்பதைத் தெரிந்து கொள்ளும். அப்போது நீ தங்கத்தைப் போல் மின்னுவாய். ஒவ்வொருவருமே உன்னை மதிப்பார்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...