ஆசிரியன் என்பவன் மாணவச் சமூகத்தை உருவாக்குபவன் அல்லன் மாறாக உயிரூட்டுபவன். ஒரு சிறந்த ஆசிரியனின் பண்புகளை, குணங்களை பார்க்கும் மாணவர்களின் மனதில் அப்படியே பதியும். எனவே ஆசிரியன் என்பவன் தமது மாணவர்களின் காலக் கண்ணாடியாவான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஓர் ஆசிரியனுக்கு இருக்கிறது. வெறும் மாணவனாக பள்ளிக்கு வரும் அவனுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவனை சாதனையாளனாக ஆக்குபவன் ஆசிரியன். "எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவன் ஆசிரியன். மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள்... வேறு எந்தப் பணிக்கும் கிடைக்காத பெருமை... ஓர் ஆசிரியனுக்கு உள்ளது என்பதற்கு... இந்தப் பழமொழியே சாட்சி. ஆசிரியன் என்பவன் கற்பிப்பவன் மட்டுமல்லன், என்றென்றும் கற்பவனும்கூட.
Tamil blog from Zites by Dr.VAM